செய்திகள்

ரஜினியின் 'ஜெயிலர்' பட போஸ்டர் - தனுஷ் என்ன சொல்கிறார்?

22nd Aug 2022 04:52 PM

ADVERTISEMENT

 

நடிகர் ரஜினியின் ஜெயிலர் முதல் பார்வை போஸ்டர் வெளியான நிலையில் தனுஷ் அதனைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் எப்பொழுதும் தன்னை ரஜினிகாந்த்தின் ரசிகராகக் காட்டிக்கொள்வார். அவரது ஒவ்வொரு பட போஸ்டரும் வெளியாகும்போதும் அதனைப் பகிர்வதை தனுஷ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ரஜினிகாந்த்தின் காலா படத்தையும் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ஆனால் ஐஸ்வர்யாவுடனான பிரிவுக்கு பிறகு அவர் அப்படி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்த நிலையில் ஜெயிலர் பட முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்து, 'வாவ்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதையும் படிக்க | ரஜினியின் 'ஜெயிலர்' அனல் பறக்கப்போவது உறுதி - புதிதாக இணைந்த பிரபலம்

முன்னதாக தனது மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்வில் கலந்துகொண்ட தனுஷ், ஐஸ்வர்யாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 நாட்களில் இந்தப் படம் ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT