செய்திகள்

ஆர்யாவின் 'கேப்டன்' டிரெய்லர் வெளியானது

22nd Aug 2022 12:15 PM

ADVERTISEMENT

 

சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் பட டிரெய்லர் வெளியானது. 

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சக்தி சௌந்தரராஜன். இவர் இயக்கத்தில் ஆர்யா - சயீஷா இணைந்து நடித்த டெடி படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனையடுத்து மீண்டும் கேப்டன் படத்துக்காக ஆர்யாவுடன் கைகோர்த்துள்ளார் சக்தி சௌந்தரராஜன். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பிரிவுக்கு பிறகு முதன்முறையாக ஒரே புகைப்படத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா: நெகிழ்ச்சி சம்பவம்

கேப்டன் பட டிரெய்லர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆர்யாவின் தி ஷோ பீப்புள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT