செய்திகள்

’வெந்து தணிந்தது காடு’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

19th Aug 2022 11:09 AM

ADVERTISEMENT

 

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3வது முறையாக இயக்குநர் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பிரபல திரையரங்கின் திரையைக் கிழித்த தனுஷ் ரசிகர்கள்

சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.

முன்னதாக, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் ‘டப்பிங்’ பணிகள் முடிவடைந்திருந்ததைத் தொடர்ந்து  அப்படத்தின் ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் ஆகஸ்ட் 14-ல் வெளியானது.

தற்போது, அப்படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற செப்.2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை பல்லாவரத்தில் நடைபெற உள்ளது. 

’வெந்து தணிந்தது காடு’ வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT