செய்திகள்

'பெண்ணும் பெண்ணும்' காதலித்தால் தவறா? வெளியானது ‘நட்சத்திரம் நகர்கிறது’ டிரைலர்

19th Aug 2022 12:27 PM

ADVERTISEMENT

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிக்க | ''இந்த முறை மிஸ் ஆகாது'' - நடிகர் விக்ரம் உறுதி

ADVERTISEMENT

இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரங்கராட்டினம்’ பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது படத்தின் ‘டிரைலர்’ வெளியாகியுள்ளது. ‘பெண்ணும் பெண்ணும்’ ‘ஆணும் ஆணும்’ காதலித்தால் என்ன தவறு எனத் தன் பாலின, எதிர் பாலின காதல்களை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட இசையமைப்பாளர் தென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

’நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT