செய்திகள்

8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி - தெலுங்கு தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு

19th Aug 2022 05:24 PM

ADVERTISEMENT

 

இனி திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகே திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். 

புஷ்பா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட தெலுங்கு படங்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் பெரும்பாலான படங்கள் திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. 

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகின்றன. இதனால் காத்திருந்து படங்களை ஓடிடியிலேயே பார்த்துவிடலாம் என்ற எண்ணம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. 

ADVERTISEMENT

 

இதையும் படிக்க | 'வேட்டையாடு விளையாடு 2' படம் குறித்து அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்

இதற்கு தீர்வு காண ஆகஸ்ட் 1 முதல் தெலுங்கு படங்களின் தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்க தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தனர். இந்த நிலையில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்ற முடிவு தற்பொழுது கையெழுத்தாகியுள்ளதாம். இந்த முடிவு திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களை அதிகரிக்குமா என்பது வெகு விரைவில் தெரிந்துவிடும். 

Tags : Theatre OTT
ADVERTISEMENT
ADVERTISEMENT