செய்திகள்

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' - மாரி செல்வராஜ் விமர்சனம் - என்ன சொல்லியிருக்காரு பாருங்க

19th Aug 2022 03:36 PM

ADVERTISEMENT

 

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு தனுஷ் - இயக்குநர் மித்ரன் ஜவகர் திருச்சிற்றம்பலம் படத்துக்காக இணைந்துள்ளனர். 

மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி இந்தப் படத்துக்காக இணைந்துள்ளது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

தனுஷுடன் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிக்க |  வாரிசு படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படம் பகிர்ந்த நடிகர் சரத்குமார்

இந்தப் படம் முதல் நாளில் ரூ.7 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் திருச்சிற்றம்பலம் படம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''நீண்ட நாட்களுக்கு பிறகு இதயத்துக்கு நெருக்கமான படம். இந்த அப்பா மகன் கதை அன்பை தூண்டுவதோடு, கண்ணீரையும் வரவழைக்கிறது. இந்த அனுபவத்துக்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சியான படைப்பு. தனுஷ் சார் மற்றும் திருச்சிற்றம்பலம் குழுவினருக்கு வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT