செய்திகள்

'வேட்டையாடு விளையாடு 2' படம் குறித்து அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்

19th Aug 2022 04:43 PM

ADVERTISEMENT

 

வேட்டையாடு விளையாடு 2 படம் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் தகவல் தெரிவித்துள்ளார். 

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் கமல் ரசிகர்களிடையே மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது. 

இப்பொழுது லோகேஷ் எப்படி ஒரு கமல் ரசிகராக ரசித்து ரசித்து விக்ரம் படத்தை உருவாக்கியிருந்தாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் கமல்ஹாசனை மிக நேர்த்தியாக காட்டியிருந்தார் இயக்குநர் கௌதம். 

ADVERTISEMENT

குறிப்பாக இந்தப் படத்தின் துவக்க காட்சியில் என் கண்ணு வேணும்னு கேட்டியாமே என கமல் பேசும் காட்சிக்கு திரையரங்குகளில் விசில் பறந்தது. விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக லோகேஷின் விக்ரம் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.  தற்போது  இந்தியன் 2 படமும் உருவாகிவருவதால் வேட்டையாடு விளையாடு 2 படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. 

இதையும் படிக்க | தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' - மாரி செல்வராஜ் விமர்சனம் - என்ன சொல்லியிருக்காரு பாருங்க

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வேட்டையாடு விளையாடு 2 குறித்து இயக்குநர் கௌதம் மேனன் பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஏற்கனவே வேட்டையாடு விளையாடு 2 படத்துக்கான கதையை 120 பக்கம் வரை எழுதிவிட்டேன். கடைசி அரை மணி நேரத்தை செதுக்கிக்கொண்டு இருக்கிறேன்.  

கமல்ஹாசன் ஒப்புக்கொள்வாரா தெரியவில்லை. வேட்டையாடு விளையாடு 2 படத்தை எனது அடுத்த படமாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT