செய்திகள்

பிரபல திரையரங்கின் திரையைக் கிழித்த தனுஷ் ரசிகர்கள்

19th Aug 2022 10:53 AM

ADVERTISEMENT

 

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தைப் பார்க்கச் சென்ற ரசிகர்கள் சென்னையின் பிரபல திரையரங்கத்தின் திரையைக் கிழித்து அட்டகாசம் செய்துள்ளனர்.

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு தனுஷ் - இயக்குநர் மிதர்ன் ஜவஹர் கூட்டணியில் மீண்டும் உருவான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

அப்பா மகன் பாசத்தை அடிப்படையாக் கொண்டு வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் ‘ஹிட்’ என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: நடிகர் விஜய்யின் 'தளபதி 67' - லோகேஷ் செய்த பெரிய மாற்றம்

கர்ணன் படத்திற்குப் பின் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், மாறன், அத்ரங்கி ரே உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் திரையரங்க வெளியீட்டுக்குக் காத்திருந்த ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல்காட்சி நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது,  திரைக்கு முன் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த ரசிகர்கள் திடீரென திரையைக் குத்தி கிழித்ததால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT