செய்திகள்

நடிகர் விஜய்யின் 'தளபதி 67' - லோகேஷ் செய்த பெரிய மாற்றம்

18th Aug 2022 03:51 PM

ADVERTISEMENT

 

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் கதையில் இயக்குநர் லோகேஷ் பெரிய மாற்றம் ஒன்றை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் விஜய் படமாக தளபதி 67 இருக்கப்போகிறது.

ADVERTISEMENT

இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவை இன்னமும் உறுதபடுத்தப்படவில்லை. இந்தப் படத்துக்கு இயக்குநர் ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களுக்கும் ரத்னகுமார் வசனம் எழுதியிருந்தார். 

 விக்ரம் படத்தில் கைதி படக் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றது, இரண்டு படங்களுக்கும் ஒரே கதைக்களம் என்பதால் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற வார்த்தை பிரபலமானது. தற்போது தளபதி 67 படமும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் ஆக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 


 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT