செய்திகள்

திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்த கௌதம் கார்த்திக்

18th Aug 2022 12:22 PM

ADVERTISEMENT

 

நடிகர் கௌதம் கார்த்தி முதன்முறையாக திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். 

நடிகர் கௌதம் கார்த்திக் சமீபத்தில் பொன் குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 16 1947 படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. 

சுதந்திர போராட்ட பின்னணியில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாக தெரிகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கௌதம் கார்த்திக்கிற்கு இந்தப் படம் வெற்றிப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை டீசர் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க |  ''மன்னிக்கவே மாட்டேன்'' - 'விருமன்' விடியோ பாடலை வெளியிட்டு கார்த்தி பதிவு

கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியானது. இது பற்றி இருவரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில்  திருமண வதந்தி குறித்து கௌதம் கார்த்திக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கௌதம் கார்த்திக், ''ஆம் , எனக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறவிருக்கிறது.  உரிய நேரம் வரும்போது இதுகுறித்து விரிவாக தெரிவிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT