செய்திகள்

'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க 99 சதவிகித வாய்ப்பு - பிரபல இயக்குநர் கணிப்பு

18th Aug 2022 02:42 PM

ADVERTISEMENT

 

ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க 99 சதவிகித வாய்ப்பு உள்ளதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார். 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர். 

இதையும் படிக்க |  ஹீரோயினாக அறிமுகமாகும் 'விஸ்வாசம்' பேபி அனிகா

ADVERTISEMENT

இந்த நிலையில் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தனது டோபரா பட நிகழ்வில் பேசிய அனுராக், ''ஹாலிவுட்டில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டால், அந்தப் படம் ஆஸ்கர் வெல்ல 99 சதவிகித வாய்ப்பி இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT