செய்திகள்

படப்பிடிப்பின்போது நடிகர் நாசருக்கு காயம்

18th Aug 2022 10:23 AM

ADVERTISEMENT

 

நடிகர் நாசருக்கு படப்பிடிப்பின்போது பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வில்லன், குணச்சித்திர வேடம், நகைச்சுவை வேடம் என அனைத்து வகை கதாப்பாத்திரங்களிலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் திறம்பட கையாண்டு தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் நாசர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் செயலாற்றிவருகிறார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ''மூச்சு இருக்கும் வரை...'' - தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு நாசர் விளக்கம்

இந்த நிலையில்,  அவர் தெலங்கானாவில் உள்ள போலீஸ் அகாடமியில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் நாசரை அனுமதித்துள்ளனர்.

தற்போது, அவர் நலமாக உள்ளார் என்றும் விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT