செய்திகள்

இணையத்தில் கசியும் விஜய்-ன் ’வாரிசு’ காட்சிகள்: படக்குழுவினர் அதிர்ச்சி

17th Aug 2022 12:11 PM

ADVERTISEMENT


நடிகர் விஜய் நடித்துவரும் ’வாரிசு’ திரைப்படத்தின் காட்சிகள் தொடர்ந்து இணையதளத்தில் கசிந்து வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். 

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க: மது விளம்பரத்தில் நடிக்க மறுத்த சிம்பு!

ADVERTISEMENT

இந்நிலையில், சமீப காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு தளம் மற்றும் நடிகர்களின் வருகை ஆகியவை விடியோவாக வெளியானதுடன் நடிகர் விஜய் நடிக்கும் சில காட்சிகளையும், புகைப்படங்களையும் செல்போனில் படப்பிடித்து சிலர் இணையத்தில் வெளியிட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது,  நடிகர் விஜயும், பிரபுவும் நடித்த மருத்துவமனைக் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தென்னிந்தியாவின் நட்சத்திர நடிகரான விஜயின் திரைப்படத்திற்கு போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால்தான் காட்சிகளை பிறர் படம்பிடிக்கிறார்கள் என அவருடைய ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருவதுடன்  ‘வாரிசு’ படக்குழுவினரும் இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT