செய்திகள்

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ‘பொன்னியின் செல்வன்’

DIN

'ஐமேக்ஸ்’ தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை பொன்னியின் செல்வன் அடைந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருள்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாவதால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6 ஆம் தேதி பொன்னியின் செல்வன் டிரைலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், உலகளவில் இப்படம் திரையிடப்பட உள்ளதால் பெரிய திரை, துல்லியமான காட்சிக் கடத்தல்கள், ஒலி அமைப்பு கொண்ட ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ’பொன்னியின் செல்வன்’ வெளியாகும்  என்றும் தமிழில் இதுவே முதல் ஐமேக்ஸ் திரைப்படம் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT