செய்திகள்

சேலை அணிந்தால் கூட கவர்ச்சியா?: வாணி போஜன்

16th Aug 2022 04:54 PM

ADVERTISEMENT

 

சேலை அணிந்திருந்தால் கூட கவர்ச்சியென கமெண்ட் செய்கிறார்கள் என நடிகை வாணி போஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் இணையத்தொடரின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ஈரம், வல்லினம், குற்றம் 23 ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இந்த தொடரின் பெயர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளனர்.  

ADVERTISEMENT

ஆக. 19 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் வாணி போஜன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: 

கவர்ச்சியாக நடிக்கலாம். ஆனால் முகம் சுளிக்கும்படி இருந்துவிடக் கூடாது. சேலை அணிந்திருந்தால் கூட கவர்ச்சி என்று கமெண்ட் செய்கிறார்கள், காலத்திற்கு ஏற்ப சிந்தனை வளர வேண்டும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT