செய்திகள்

ஹிந்தி சினிமாக்களை விட தமிழ், மலையாளப் படங்கள் நன்றாக உள்ளன: அனுராக் காஷ்யப்

16th Aug 2022 06:41 PM

ADVERTISEMENT

 

ஹிந்தி சினிமாக்களை விட தமிழ், மலையாளப் படங்கள் நன்றாக உள்ளதாக ஹிந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். 

ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முதற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு விருதுகளையும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளது. இவரது அடுத்த படம் டாப்ஸி பண்ணு கதாநாயகியாக நடிக்கும் ‘டோபாரா’ படம் வெளியாக இருக்கிறது. இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஹிந்தி சினிமாக்கள் பார்க்கவே பிடிக்கவில்லை. ஹிந்தியில் புதியதாக யாரும் யோசிப்பதில்லை. ஏற்கனவே இருக்கும் கதையைத்தான் மீண்டும் மீண்டும் எடுக்கிறார்கள். ஆனால் மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமாவில் புதிய முயற்சிகள் எடுக்கிறார்கள். அவர்களது கலாச்சாரம் பற்றி படத்தில் இருக்கிறது. இந்தியில் அவ்வாறு கலாச்சாரத்தை காட்டவேண்டுமென மெனக்கெடுவதில்லை. குறிப்பாக மலையாள சினிமா அபாரமாக எடுக்கிறார்கள். நான் இப்போதெல்லாம் மலையாளம், தமிழ் சினிமாக்களைத்தான் அதிகம் விரும்பி பார்க்கிறேன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT