செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித் குமார் (விடியோ)

16th Aug 2022 05:48 PM

ADVERTISEMENT

 

படப்பிடிப்பிற்குச் செல்வதற்காக சென்னை விமான நிலைம் வந்த நடிகர் அஜித் குமாரின் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், படப்பிடிப்பிற்கு செல்வதற்காக நடிகர் அஜித் குமார் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரைக் கண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து பயணிகளுடன் பயணியாக பேருந்தில் நின்றபடி பயணம் செய்தார். இந்த விடியோவை அஜித் குமாரின் ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். 

 

ஐரோப்பிய சுற்றுப்பயணம் மற்றும் திருச்சி ரைஃபிள் கிளப் துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்கு பிறகு அஜித் குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வினோத் உடனான படத்திற்கு பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ளார். வெளிநாடு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள விக்னேஷ் சிவன் நாடு திரும்பியதும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT