செய்திகள்

மாமனிதன் திரைப்படத்திற்கு 4 சர்வதேச விருதுகள்!

16th Aug 2022 03:28 PM

ADVERTISEMENT

 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்பத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளன. 

யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்த படம் மாமனிதன். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி  நாயகனாக நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து  இசையமைத்திருந்தனர். 

இதையும் படிக்க: ரஜினிகாந்துக்கு மனைவி லதா கொடுத்த பரிசு: மகள் செளந்தர்யா பகிர்ந்த தகவல்

ADVERTISEMENT

கடந்த ஜூன் 24 ஆம் தேதி வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விருது விழாக்களில் பங்கேற்று சில விருதுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், பூட்டானில் நடைபெற்ற ‘டுருக்(druk) சர்வதேச திரைப்பட விழா’வில் பங்கேற்ற இப்படம்  சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த சர்வதேச படம், சிறந்த குடும்ப திரைப்படம் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது.

முன்னதாக, கொல்கத்தாவில் நடைபெற்ற தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்திருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT