செய்திகள்

அடுத்த படத்துக்கு தயாராகும் லெஜண்ட் சரவணன்

15th Aug 2022 02:19 PM

ADVERTISEMENT

 

லெஜண்ட் சரவணன் புதிய படத்துக்கு தயாராகிவருவதாக தகவல் கிடைத்துள்ளது. 

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன்  தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியிருந்தனர். 

இந்தப் படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான அவரது கடைசிப்படமாக அமைந்தது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்

லெஜண்ட் படத்துக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களை அடுத்து தனது புதிய படத்தில் லெஜண்ட் கவனம் செலுத்தி வருகிறாராம். குறிப்பாக தன்னை வைத்து படம் இயக்குமாறு பிரபல இயக்குநர்களை அனுகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அதிக சம்பளம் கொடுக்கவும் தயாராக இருக்கிறாராம். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT