செய்திகள்

தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்துக்கு தி கிரே மேன் இயக்குநர்கள் விமர்சனம்

15th Aug 2022 04:06 PM

ADVERTISEMENT

 

தனுஷின் தி கிரே மேன் படத்தை தி கிரே மேன் இயக்குநர்கள் விமர்சிக்கும் விடியோ வைரலாகி வருகிறது. 

தனுஷ் சிறப்பு வேடத்தில் நடித்திருந்த தி கிரே மேன் படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கப்படவிருப்பதாக அதன் இயக்குநர்கள் ருசோ பிரதர்ஸ் அறிவித்தனர். 

மேலும் நடிகர் தனுஷும் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ருசோ பிரதர்ஸ் தனுஷின் ஜகமே தந்திரம் படம் குறித்தும் அதில் நடிகர் தனுஷின் நடிப்பு குறித்தும் பகிர்ந்துகொண்ட விடியோவை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

சமீபத்தில் தி கிரே மேன் படத்துக்காக தனுஷுடன் நாங்கள் நேரம் செலவிட்டோம். தி கிரே மேன் படத்தில் சிறப்பான ரியான் கோஸ்லிங், வசீகரமான கிரிஸ் ஈவன்ஸ் நடித்துள்ளனர். மேலும் சிறப்பாக உள்ளார்ந்து நடிக்கக்கூடிய ஒருவர் எங்களுக்கு தேவைப்பட்டார். இந்த உலகத்தில் இதனை செய்யக்கூடிய ஒரே நடிகர் தனுஷ் என்பது எங்களுக்கு தெரியும். 

நாங்கள் தனுஷுடன் பணிபுரிவதற்கு முன்பே அவரது ரசிகர்கள். இந்த வேடத்துக்கு அவர் தான் சரியான நபர். அவர் மூவ்மென்டின் மாஸ்டர். அவர் சண்டையிடுவதிலும் நடனமாடுவதிலும் ஒற்றுமை இருந்தது. அவரது எனர்ஜி வியக்கவைத்தது.

அவர் கவர்ந்திழுக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறார். மேலும் அவரிடம் சிறப்பான மீசை உள்ளது. அவர் நடப்பதில் ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. கைகளை திறமையாக பயன்படுத்தக் கூடிய நடிகர்'' என்று பேசினர். 

தனுஷ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த விடியோவை பகிர்ந்து ருசோ பிரதர்ஸ்க்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT