செய்திகள்

ரஜினிகாந்த்துக்கு வயது 47 - கொண்டாடும் ரசிகர்கள்

15th Aug 2022 03:11 PM

ADVERTISEMENT

 

ரஜினிகாந்த் தனது திரையுலக வாழ்வில் அடியெடுத்துவைத்து 47 ஆண்டுகளாகிறது. அதாவது அவரது முதல் படமான அபூர்வ ராகங்கள் வெளியாகி இன்றுடன் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

சிவாஜி ராவாக இருந்தவர் ஒரு பெரிய இரும்புக் கதவைத் திறந்துகொண்டு ரஜினிகாந்த்தாக திரையுலகில் நுழைந்தார். துவக்கத்தில் எதிர்மறை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களே அவருக்கு கிடைத்தன. 

ஆனால் அதனை தனக்கே உரிய பாணியில் மன்னிக்கவும் ஸ்டைலில் கையாண்டு ரசிகர்களிடம் கைத்தட்டுக்களைப் பெற்றார். அந்தக் காலகட்டத்தில் பொதுவாக வில்லனாக நடிக்கும் நடிகர்கள் மீது ரசிகர்களுக்கு கோபம்தான் வரும். 

ADVERTISEMENT

ஆனால் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் இந்த அளவுக்கு நேசிப்பார்களா என திரையுலகிமே ஆச்சரியத்தில் உறைந்தது. அதன் காரணமாக விரைவிலேயே ஒரு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வில்லனாக இருந்து ஹீரோவாக வென்றவர்கள் ஏராளம். 

முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்தார் ரஜினிகாந்த். ஆனால் கமர்ஷியல் படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த தெளிவுதான் அவரை தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது.  

அவரது புகழ் இந்தியாவைத்தாண்டி ஜப்பான் வரை எதிரொலித்தது. உலக அளவில் ஜாக்கி சான் போல தனித்துவமான நடிப்பு பாணியைக் கொண்டிருந்ததே அவரது உலகப் புகழுக்கு காரணம். இந்திய அளவில் அவர் அளவுக்கு தனித்துவமாக நடிப்பவர்கள் மிக குறைவே.  

ஓரு சிலரைத் தவிர தமிழ் திரையுலகில் பெரும்பாலானோர் கமர்ஷியல் படங்களில் தான் நடிக்கிறார்கள். ரஜினிகாந்த்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு புகழ்? ரஜினிகாந்த் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படங்களிலேயே நடிப்பார். அவரது படங்களின் கதை மிக மிக எளிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார். 

47 ஆண்டுகள் தாண்டியும் ஒரு நடிகரின் படத்துக்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் என்றால் அது ரஜினிகாந்த் படமாகத்தான் இருக்கும். ஜெயிலர் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பே அதற்கு சாட்சி. ஜெயிலர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்படமாக இருக்கும் என நம்புவோம். 

Tags : Rajinikanth
ADVERTISEMENT
ADVERTISEMENT