செய்திகள்

''இந்தியாவை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல'' - சர்ச்சையாகும் பி.சி.ஸ்ரீராமின் பதிவு

15th Aug 2022 05:16 PM

ADVERTISEMENT

 

'இந்தியாவை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல' என பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. 

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து தேசப்பக்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.

திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்கள் ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் இந்தியாவை நேசிக்கிறேன். ஆனால் அரசை அல்ல. ஜெய்ஹிந்த்'' என ட்வீட் செய்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்

இதனையடுத்து அரசு பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என பாஜக ஆதரவாளர்கள் அவரது பதிவுக்கு கமெண்ட் செய்துவருகிறார்கள். ஒரு சிலர் மோசமான வார்த்தைகளாலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT