செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் 'ஆகஸ்ட் 16,1947' பட டீசரை வெளியிட்ட சிம்பு

15th Aug 2022 05:36 PM

ADVERTISEMENT

 

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 பட டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகஸ்ட் 16, 1947. என்.எஸ்.பொன்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இதையும் படிக்க | சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்

இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, விஜய் டிவி புகழ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இந்தக் கதை நடக்கிறது.  

ADVERTISEMENT

சான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.  இந்தப் படத்தின் டீசரை நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.  படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த டீசர் உருவாக்கியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT