செய்திகள்

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் 2வது பாடல் (விடியோ)

14th Aug 2022 08:50 PM

ADVERTISEMENT

 

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியானது. 

''மறக்குமா நெஞ்சம்..'' எனத் தொடங்கும் இந்தப் பாடலை கவிஞர் தாமரை எழுத இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். 

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா திரைப்படங்களைத் தொடர்ந்து, சிம்பு - கெளதம் வாசுதேவ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. 

ADVERTISEMENT

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அறிமுக நாயகி ஷித்தி இத்னானி நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இப்படம் செப்டம்பர் 15 ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இன்று இரண்டாவது சிங்கிள் லிரிக் விடியோ வெளியாகியுள்ளது. மறக்குமா நெஞ்சம் எனத் தொடங்கும் இந்தப் பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT