செய்திகள்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரம்யா பாண்டியன்

14th Aug 2022 05:14 PM

ADVERTISEMENT

 

நடிகை ரம்யா பாண்டியன் தனது பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிறந்த ரம்யா பாண்டியனின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “காதல் ஒரு முன்முயற்சியின் வடிவத்தில் உருவாகும்போது, ​​அதைவிட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை. இயற்கை அன்னைக்கு பங்களிப்பாக 222 செடிகள் மூலம் மரக்கன்றுகளை நடும் முயற்சியில் ஈடுபட்டது பாராட்டுக்குரியது” என பதிவிட்டு இருந்தார். 

ADVERTISEMENT

நடிகை ரம்யா பாண்டியன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

நான் உங்களது வாழ்த்துகளை இன்றும் சமூக வலைதளங்களில் பார்க்கிறேன். டிவிட்டரில் எனது பிறந்தநாளை டிரெண்டிங் செய்ததற்கும், எண்ணற்ற பரிசுகளை எனக்கு அனுப்பியதற்கும், மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், மரக்கன்றுகள், உணவுபொருள்கள் விநியோகித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

நான் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள். வார்த்தைகள் இல்லை பேசுவதற்கு. எனது குடும்பம், நண்பர்கள், எனது நலம் விரும்பிகள் என அனைவருக்கும் எனது நன்றி.

ADVERTISEMENT
ADVERTISEMENT