செய்திகள்

விருமன் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

13th Aug 2022 06:08 PM

ADVERTISEMENT

 

விருமன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் விருமன். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள இந்தப் படம் நேற்று(ஆகஸ்ட் 12) கலவயைான விமர்சனங்களைப் பெற்றது. 

இருப்பினும் குடும்ப ரசிகர்களை இந்தப் படம் கவரும் என்று கூறப்படுகிறது. மேலும் திங்கள் கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை என்பதால் 4 நாட்கள் இந்தப் படத்துக்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்

இந்த நிலையில் முதல் நாளில் மட்டும் இந்தப் படம் ரூ.8.2 கோடி வசூலித்துள்ளதாக இந்தப் படத்தை விநியோகம் செய்துள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT