செய்திகள்

'அம்மா...' - ஸ்ரீதேவியின் பிறந்த நாளில் அவரது மகள் உருக்கமான பதிவு

13th Aug 2022 04:10 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீதேவியின் பிறந்த நாளின் போது அவரது மகள் ஜான்வி கபூர் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். 

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி துபையில் மரணமடைந்தார். அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் அவரது பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 13) சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரது நினைவுகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது அம்மாவின் 59வது பிறந்த நாளை முன்னிட்டு தனது சிறுவயது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிக்க | சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்

அதில், பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா, உன்னை ஒவ்வொரு நாளும் அதிகமாக மிஸ் செய்கிறேன். எப்பொழுதும் உங்களை நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT