ஆமிர் கானின் லால் சிங் சத்தா படத்துக்கு முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
ஃபாரஸ்ட் கம்ப் என்ற ஆங்கிலப் படத்தின் இந்திய தழுவலான ஆமிர் கானின் லால் சிங் சத்தா கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகியிருந்தது.
பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதால் தெலுங்கு ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இதையும் படிக்க | சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்
விமர்சகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ரசிகர்களின் ஆதரவும் குறைவாக இருப்பதாக தெரிகிறது. எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான வசூலே இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாளில் இந்தப் படம் இந்திய அளவில் ரூ.10.75 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். இதன் காரணமாக திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய படங்கள் வட இந்திய ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, நல்ல வசூலையும் பெற்றுவருகிறது. அதே போல ஹிந்தி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய ஆதரவு கிடைப்பதில்லை. அந்த தாக்கம் லால் சிங் சத்தா படத்தின் மீதும் எதிரொலித்துள்ளது.