செய்திகள்

பிரபல பெண் இயக்குநரின் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா

12th Aug 2022 05:37 PM

ADVERTISEMENT

 

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்தவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் அதிகம் பிரபலமானார். 

இவர் இயக்குநரும் கூட. ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். 

இதையும் படிக்க |  சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்

ADVERTISEMENT

இந்தப் படத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி, அபிராமி, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பதாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், இளையராஜா என் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். என்ன ஒரு அனுபவம். என் படத்துக்கு அவர் பின்னணி இசை அமைப்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT