செய்திகள்

குடும்பத்துடன் 'விருமன்' படம் பார்த்த விஜய் ?

12th Aug 2022 04:45 PM

ADVERTISEMENT

 

விருமன் படத்தின் முதல் காட்சியை நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா திரையரங்கில் பார்த்துள்ளார். 

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள விருமன் படம் திரையரங்குகளில் இன்று (ஆகஸ்ட் 12) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. கொம்பன் படத்துக்கு பிறகு இயக்குநர் முத்தையா - கார்த்தி இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. 

இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து விருமன் படத்தின் முதல் காட்சியை இயக்குநர் ஷங்கர் தனது மனைவி, மூத்த மகள் ஆகியோருடன் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பார்த்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்

இந்த நிலையில் ஷங்கர் குடும்பத்துடன் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் விருமன் படம் பார்க்க திரையரங்குக்கு வந்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவரால் எடுக்கப்பட்ட விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் விஜய்யும் படம் பார்த்ததாக தகவல் பரவியது. ஆனால் அந்தத் தகவல் உண்மையில்ல எனவும் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT