செய்திகள்

யுவன் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய 'லவ் டுடே' பாடல் ப்ரமோ இதோ

11th Aug 2022 02:24 PM

ADVERTISEMENT

 

லவ் டுடே படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய  பாடல் ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

கோமாளி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக தானே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம் லவ் டுடே. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே சாச்சிட்டாளே என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது என்னை விட்டு என்ற பாடலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப் பாடலை பிரதீப் ரங்கநாதன் எழுதியுள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?

என்னை விட்டு பாடல் நாளை (ஆகஸ்ட் 12)  மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடிக்க, ராதிகா, யோகி பாபு, ரவீனா, ஃபைனலி பரத், ஆதித்யா கதிர், ஆஜித், விஜய் வரதராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ் புருஷோத்தமன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT