செய்திகள்

விக்ரம் பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்ன சொன்னார்?: லோகேஷ் கனகராஜ் பதில்

11th Aug 2022 07:29 PM

ADVERTISEMENT

 

விக்ரம் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்ன சொன்னார் என்கிற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது.

இப்படம் திரையரங்கில் வெளிவந்த நாள் முதல் ஓடிடியில் வெளியானது வரை ரசிகர்களின் தொடர் பாராட்டுகளைப் பெற்றதுடன் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனையையும் படைத்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ஆபாசமாக பேசியவருக்கு பதிலடி கொடுத்த சுனிதா

இந்நிலையில், சமீபத்தில் இளம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், ‘விக்ரம் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்ன சொன்னார்?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு லோகேஷ், ‘படம் வெளியானபோது இணையத் தொடர்பு இல்லாத இடத்தில் இருந்தேன். மாலையில் செல்போனை பார்த்தபோது விஜய் சார், பிரமிப்பாக இருந்தது - மைண்ட்ஃப்ளோயிங் (mindblowing) என செய்தி அனுப்பியிருந்தார். அவர் இரண்டு முறை அப்படத்தைப் பார்த்துவிட்டார்’ என பதிலளித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT