செய்திகள்

ஆபாசமாக பேசியவருக்கு பதிலடி கொடுத்த சுனிதா

11th Aug 2022 06:28 PM

ADVERTISEMENT

 

இன்ஸ்டாகிராமில் தன்னிடம் ஆபாசமாக பேசியவருக்கு நடிகை சுனிதா பதிலடி கொடுத்துள்ளார். 

விஜய் டிவியின் ஜோடி போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது திறமையின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் சுனிதா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 3 சீசன்களாக கோமாளியாக கலக்கிக்கொண்டிருக்கிறார். 

அவரது தமிழ் உச்சரிப்புக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி முடிந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?

இந்த நிலையில் சுனிதாவின் பிகினி உடை குறித்து ஒருவர் ஆபாசமாக பேச, அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து, நீ ஒரு கோழை என கடுமையாக திட்டியுள்ளார். சுனிதாவின் தைரியமான செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT