யுவன் இசையில் ஷங்கர் மகாதேவன் பாடிய பரம்பொருள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அமிதாஷ். தற்போது பரம்பொருள் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அமிதாஷ்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் காஷ்மீரா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பரம்பொருள் படத்தை அரவிந்த் ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திலிருந்து தற்போது சிப்பாரா ரிப்பாரா என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?
விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இந்தப் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த யுவன், இந்தப் பாடலுக்காக ஷங்கர் மகாதேவனுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்துள்ளேன். என் முதல் படமான அரவிந்தனின் நாயகன் சரத்குமார், மிகவும் அழகான அமிதாஸ் ஆகியோருடன் பணிபுரிவதில் மிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.