செய்திகள்

பொன்னியின் செல்வனை பிரபலப்படுத்த முன்வரும் ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

11th Aug 2022 03:32 PM

ADVERTISEMENT

 

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா குறித்து சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். 

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் மற்றும் பொன்னி நதி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மற்ற பாடல்களை வெளியிடும் வகையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா முடிவு செய்துள்ளதாம். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனை இந்திய அளவில் பிரபலப்படுத்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்  முன்வந்துள்ளதாக தெரிகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT