செய்திகள்

திருமணம் நிறுத்தப்பட்டதாக பரவும் செய்திக்கு நடிகை பூர்ணா பதில்

11th Aug 2022 05:02 PM

ADVERTISEMENT

 

நடிகை பூர்ணாவின் திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை பூர்ணாவிற்கும் துபையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இருவருக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படங்களை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் நடிகர் பூர்ணாவின் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் பரவிவருகிறது. இதனை மறுக்கும் விதமாக நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?

பூர்ணா தற்போது மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 31 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பூர்ணா நடித்துவருகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT