செய்திகள்

குட்கா விளம்பரத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜூன்

11th Aug 2022 03:59 PM

ADVERTISEMENT

 

நடிகர் அல்லு அர்ஜூன் குட்கா விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற புஷ்பா திரைப்படத்திற்குப் பின் அவருடைய சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, சில நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும் ஒப்பந்தமானார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: பொன்னியின் செல்வனை பிரபலப்படுத்த முன்வரும்  ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

இந்நிலையில், குட்கா மற்றும் மதுவகை நிறுவனம் ஒன்று தங்களுடைய விளம்பரத்தில் நடிக்க  ரூ.10 கோடி கொடுக்க முன்வந்தும் அதை விளம்பரப்படுத்த அல்லு அர்ஜூன் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, ஒரு விளம்பரத்தில் நடிக்க அவர் ரூ.7.5 கோடி வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT