செய்திகள்

படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம்

11th Aug 2022 09:09 PM

ADVERTISEMENT

 

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

’வீரமே வாகை சூடும்’ படத்திற்குப்  பிறகு ’லத்தி’ படத்தில் நடித்துள்ள நடிகர் விஷால் தற்போது, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இதையும் படிக்க: விக்ரம் பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்ன சொன்னார்?: லோகேஷ் கனகராஜ் பதில்

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று காலை சண்டைக் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

முன்னதாக, லத்தி படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT