செய்திகள்

அமீர்கான் படத்தில் ஷாருக்கான்!

10th Aug 2022 12:40 PM

ADVERTISEMENT

 

நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘லால்சிங் சத்தா’ திரைப்படத்தில் ஷாருக்கான் கௌரவ தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

நடிகர் அமீர்கான் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பின் திரைக்கு வரும் படம் ’லால்சிங் சத்தா’. இப்படம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஃபாரஸ்ட் கம்ஃப்’ திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கைதி - 2 எப்போது? வெளியான புதிய தகவல்

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் 5 மொழிகளில் நாளை(ஆகஸ்ட் 11) வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில், இப்படத்தின் சிறப்புக்காட்சியைக் கண்ட திரை நட்சத்திரங்கள் அமீர்கானின் நடிப்பு குறித்து பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் சில நிமிடங்கள் நடிகர் ஷாருக்கான் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் புகழ்பெற்ற இரண்டு நடிகர்கள் ஒரே படத்தில் தோன்றுவது இருவரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT