செய்திகள்

'சமந்தாவை நேரில் சந்தித்தால்...': எதிர்பாராத பதிலை அளித்த நாக சைதன்யா

10th Aug 2022 04:17 PM

ADVERTISEMENT

 

சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்? என்கிற கேள்விக்கு நடிகர் நாக சைதன்யா பதிலளித்துள்ளார்.

அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள ’லால் சிங் சத்தா’ திரைப்படத்தில் நடிகரும் சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா நடித்துள்ளார்.

தற்போது, இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வரும் நாக சைதன்யாவிடம், சமந்தாவை நீங்கள் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு அவர்  ‘அப்படி சந்திக்க நேர்ந்தால், ஒரு ‘ஹாய்’ சொல்லி கட்டிப்பிடிப்பேன்’ என பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க: அமீர்கான் படத்தில் ஷாருக்கான்!

மேலும், நாக சைதன்யா கையிலிருக்கும் டாட்டூ குறித்து கேள்வி கேட்டபோது, அது தன் திருமண நாள் என்றும் அதனை அழிக்கும் எண்ணம் இதுவரை வந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ’காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை சமந்தாவிடம் இயக்குநர் கரண் ஜோஹர் நாக சைதன்யாவை சமந்தாவின் கணவர் எனக் குறிப்பிட்ட பேச நடிகை சமந்தா இடைமறித்து முன்னாள் கணவர் என திருத்தி பேசினார்.

தொடர்ந்து நடந்த உரையாடலில் ’தி பேமலி மேன் 2’ படத்தில் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா என கரண் எழுப்பிய கேள்விக்கு அப்படி நடந்தால் கூர்மையான பொருள்களை நீங்கள் மறைத்து வைக்க நேரிடும் என கிண்டலாக பதிலளித்த சமந்தா எதிர்காலத்தில் அவ்வாறு நடிப்பதற்கான வாய்ப்பு அமையலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT