செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

9th Aug 2022 11:10 AM

ADVERTISEMENT

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் திரைக்கு வந்த மொத்தம் 10 திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளன.

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் கார்கி. இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல்,  லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் மொழிகளில் வெளியான தி வாரியர், ஆகஸ்ட் 11ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

அமலா பால் தயாரிப்பில் முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ள கடாவர் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இதையும் படிக்க | கவனம் ஈர்க்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பாடல்

ADVERTISEMENT

தெலுங்கு மொழியில் திரைக்கு வந்த ஹேப்பி பர்த்டே ஆகஸ்ட் 8ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியிலும், தேங்க்யூ திரைப்படம் ஆகஸ்ட் 12-ல் அமேசான் ப்ரைமிலும், ஹல்லோ வோர்ல்டு ஆகஸ்ட் 12-ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

ஹிந்தியில் வெளியான ஓம் மற்றும் கன்னடத்தில் வெளியான விண்டோ சீட்
ஆகிய திரைப்படங்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளன.

ஹாலிவுட்டில் வெளியான ஐ எம் குரூட் திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும், டே ஷிப்ட் திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகவுள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT