செய்திகள்

‘மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக... ’:புகைப்பட கலைஞர்களுடன் டாப்ஸி வாக்குவாதம்

9th Aug 2022 05:14 PM

ADVERTISEMENT

 

நடிகை டாப்ஸி தனது அடுத்த படத்தின் புரமோஷன் விழாவிற்கு வந்தபோது நிழற்படக் கலைஞருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

35 வயதான டாப்ஸி இந்தி சினிமாவில் சிறப்பாக நடித்து வருகிறார். தற்போது அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆகஸ்ட் 19 இப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாக உள்ளது. இயக்குநர் அனுராக் டாப்சி இணைந்து பணியாற்றும் 3வது திரைப்படம் இது என்பதும் லண்டன், பண்டாசியா சர்வ்தேச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பினையும் இப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்தப் படத்தின் புரமோஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு வந்த போது புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் தனிமுறை நிழற்படக் கலைஞர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். 2 மணி நேரம் காத்திருந்ததால் புகைப்படக் கலைஞர்கள் கோபமடைந்ததாக தெரிகிறது. 

ADVERTISEMENT

விழாவிற்கு தாமதமாக வந்த டாப்ஸி புகைப்படக்காரர்களுக்கு புகைப்படம் எடுக்க நேரம் ஒதுக்காத்தால் இந்த வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டாப்ஸி பேசியதாவது: 

நான் என்னுடைய வேலையை செய்கிறேன். சொன்ன நேரத்திற்குதான் நான் எல்லா இடங்களுக்கும் செல்கிறேன். என்னிடம் மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன். 

எப்போதும் கேமிரா எங்களுக்கு முன்பு இருப்பதால் நாங்கள் பேசுவது மட்டும் தெரிகிறது. உங்கள் பக்கம் கேமிரா திரும்பி இருந்தால் தெரியும் உங்களது பேச்சு எப்படி இருக்கிறதென. நீங்கள் எப்போதும் சரி. நடிகர்கள் நாங்கள் எப்போதும் தவறு.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Asian News International (@ani_trending)

ADVERTISEMENT
ADVERTISEMENT