செய்திகள்

கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

9th Aug 2022 07:21 PM

ADVERTISEMENT

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படம் ஆகஸ்ட 31ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படதை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், தயாரிப்பு - எஸ்.எஸ். லலித் குமார். 

ஆரம்பத்தில் ஆகஸ்ட் 11இல் வெளியாகுமென சொல்லப்பட்டு இருந்தது. தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா என உலகம் முழுவதும் வெளியாகும் என இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT