செய்திகள்

'ஜெயிலர்' படப்பிடிப்பு எப்போது? ரஜினி சொன்ன தகவல்

8th Aug 2022 01:57 PM

ADVERTISEMENT

'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்கிற தகவலை ரஜினி வெளியிட்டுள்ளார். 

'பீஸ்ட்' படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறார் நெல்சன். 'ஜெயிலர்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கவுள்ளார்.

மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ஜெயிலர் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் இயக்குநர் நெல்சன் உறுதியாக உள்ளார்.

இதையும் படிக்க- ஆளுநருடன் அரசியல் பேசினேன்; ஆனால் அதுபற்றி சொல்ல முடியாது: நடிகர் ரஜினிகாந்த்

ADVERTISEMENT

இந்த நிலையில் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்கிற தகவலை ரஜினி வெளியிட்டுள்ளார். இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயிலர் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 அல்லது 25ஆம் தேதி தொடங்கும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT