செய்திகள்

'நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். அதனால்...” : அமீர்கான் உருக்கம்

2nd Aug 2022 12:49 PM

ADVERTISEMENT

 

இந்தியாவை மிகவும் நேசிப்பதாக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

நடிகர் அமீர்கான் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பின் திரைக்கு வரும் படம் ’லால் சிங் சத்தா’. இப்படம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஃபாரஸ்ட் கம்ஃப்’ திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, அப்படத்தின் புரோமோஷன் பணிகளில்  ஈடுபட்டுள்ள அமீர்கானிடம் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சமூக வலைதளங்களில் சிலர் லால்சிங் சத்தா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனக்  கருத்துத் தெரிவித்து வருவதைக் குறித்து  ‘திரைப்படம் திரையரங்கம் வருவதற்கு முன்பாகவே வெறுப்பைச் சம்பாதிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: அடுத்த பட அறிவிப்பு வரும் வரை... லோகேஷ் கனராஜ் பகிர்ந்த முக்கிய தகவல்

அதற்கு அமீர்கான்   ‘இது மிகவும் வருத்தமாக உள்ளது. இதைச் சொல்லும் சிலர் என்னை இந்த நாட்டிற்கு எதிரானவன் என நம்புகிறார்கள். அது உண்மையல்ல. நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள். படத்தைப் பாருங்கள்’ என உருக்கமாக பதிலளித்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘லால் சிங் சத்தா’-வில் அமிர்கானுடன் கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT