செய்திகள்

கேஜிஎஃப் 2 படம் பார்த்த இளையராஜா, கமல் ஹாசன் (படங்கள்)

29th Apr 2022 03:41 PM

ADVERTISEMENT

 

சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தை இளையராஜாவும் கமல் ஹாசனும் சென்னையில் கண்டுகளித்துள்ளார்கள். 

யஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் 2 படம் முதல் நாளன்று ரூ. 134.5 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. தற்போது இதன் ஹிந்திப் பதிப்பு இந்தியாவில் அதிகமாக வசூலித்த 3-வது ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. நேற்று இந்தியாவில் ரூ. 6.25 கோடி வசூலித்துள்ளது. இதுவரை இந்தியாவில் இதன் வசூல் - ரூ. 348 கோடி. இதனால் டைகர் ஜிந்தா ஹை, பிகே, சஞ்சு படங்களின் வசூலைத் தற்போது தாண்டியுள்ளது. ஆமிர் கானின் டங்கல் படம் வசூலை (ரூ. 387.38 கோடி) முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அது நிகழும்போது, இந்தியாவில் அதிக வசூலைக் கண்ட ஹிந்திப் படங்களில் முதல் இரு படங்களாக பாகுபலி 2, கேஜிஎஃப் 2 என இரு தென்னிந்தியப் படங்களே இருக்கும்.

ADVERTISEMENT

இந்நிலையில் கேஜிஎஃப் 2 படத்தை பிரபல நடிகர் கமல் ஹாசனும் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும் சென்னையில் கண்டுகளித்துள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT