செய்திகள்

பாகுபலி 2 வெளியாகி ஐந்து வருடங்கள்: ரூ. 500 கோடி வசூலை முறியடிக்கத் திணறும் ஹிந்திப் படங்கள்!

ச. ந. கண்ணன்

பாகுபலி 2 படத்தை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. இந்தியத் திரையுலகில் மகத்தான வெற்றி கண்ட, அதிக வசூல் கண்ட படம் இது. 2017, ஏப்ரல் 28 அன்று வெளியானது.

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது.

பாகுபலி 2 படம் உலகளவில் ரூ. 1,700 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

2017-ம் ஆண்டு வெளியான பாகுபலி 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு இந்தியாவில் மட்டும் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த வசூல் தான் இதன் அடையாளமாக இன்றும் உள்ளது.

படம் வெளியாகி 5 வருடங்களான பிறகும் வேறெந்த ஹிந்திப் படத்தாலும் பாகுபலி 2-ன் உயரத்தைத் தொட முடியாத நிலையே இன்றும் நீடிக்கிறது. ரூ. 500 கோடியைக் கூட அல்ல, ரூ. 400 கோடியைக் கூட அதற்குப் பிறகு வந்த ஹிந்திப் படங்களால் நெருங்க முடியவில்லை.

பாகுபலி 2-க்கு அடுத்ததாக இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படம் - டங்கல். 2016-ல் வெளியான டங்கல், இந்தியாவில் ரூ. 387 கோடி வசூலித்தது.

இந்தியாவில் அதிகமாக வசூலித்த ஹிந்திப் படங்கள்

1. பாகுபலி 2 (ஹிந்தி), 2. டங்கல், 3. கேஜிஎஃப் 2 (ஹிந்தி), 4. சஞ்சு, 5. பிகே 6. டைகர் ஜிந்தா ஹை, 7. பஜ்ரங்கி பைஜான், 8. வார், 9. பத்மாவத், 10. சுல்தான்.

பாலிவுட்டில் சாதனை நிகழ்த்திய படங்கள்

முதல் ரூ. 100 கோடி படம்: கஜினி (2008)
ரூ. 200 கோடி: 3 இடியட்ஸ் (2009)
ரூ. 300 கோடி: பிகே (2014)
ரூ. 400 கோடி: பாகுபலி 2 (ஹிந்தி)
ரூ. 500 கோடி: பாகுபலி 2 (ஹிந்தி)

பாகுபலி 2 (ஹிந்தி) இந்தியாவில் நிகழ்த்திய சாதனைகள்

ரூ. 100 கோடி: 3-வது நாள்
ரூ. 200 கோடி: 6-வது நாள்
ரூ. 300 கோடி: 10-வது நாள்
ரூ. 400 கோடி: 15-வது நாள்
ரூ. 450 கோடி: 20-வது நாள்
ரூ. 475 கோடி: 24-வது நாள்
ரூ. 500 கோடி: 34-வது நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT