செய்திகள்

'பொன்னியின் செல்வன்' ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய அமேசான்

28th Apr 2022 10:45 AM

ADVERTISEMENT

இயக்குநர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக மணிரத்னம்  இயக்கி வருகிறார். லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தில் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், த்ரிஷா குந்தவி தேவியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகர்களின் தோற்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை சேர்த்து ரூ. 125 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT