செய்திகள்

''ரொம்ப வலிக்குது... ஆனால் வலியில்லாமல் காதலில்லை...'': விக்னேஷ் சிவன் உருக்கம்

23rd Apr 2022 05:30 PM

ADVERTISEMENT


இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி வெளியாகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை, உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

இந்தப் படத்தில் அனிருத் இசையில் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளது. 

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தப் பட இறுதிகட்ட பணிகளின்போது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒவ்வொருமுறை படத்தை உருவாக்கும்போதும் கடைசி நாட்கள்தான் சிறந்த நாட்களாக இருக்கும்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | அறுவைச் சிகிச்சைக்கு பிறகு உடனடியாக படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற குஷ்பு

நான் தொடர்ச்சியாக அனிருத்துடன் நேரத்தை செலவிட்டேன். நடிகர்களின் சிறப்பான நடிப்பினால் ஒவ்வொரு காட்சியும் உயிர்பெறுவதைப் பார்த்தேன். இந்த நாட்களில் நான் வாழ்ந்தேன். கடைசி 5 நாட்கள் என் பேபி மற்றும் என் காதலான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துடன் நேரம் செலவிட்டேன். 

இந்தப் படத்துக்காக அதிக காதலும், நேசமும் கொண்டு உழைத்திருக்கிறேன். இதனை திரும்பபெறும்போது இருக்கும் வலியானது என்னுள் தொடங்கியிருக்கிறது. மிகவும் வலிமிகுந்தது. ஆனால் வலி தேவைதான். காரணம் வலியில்லாமல் காதலில்லை. என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT