செய்திகள்

ஆலியாவை அப்படியே தூக்கிச் சென்ற ரன்பீர் (விடியோ)

14th Apr 2022 08:38 PM

ADVERTISEMENT


நடிகர்கள் ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஆகியோர் திருமணத்துக்குப் பிறகு முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

நடிகர்கள் ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்றது. கரீனா கபூர், கரண் ஜோஹர், ஸோயா அக்தர், அர்ஜூன் கபூர் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்தபிறகு, இருவரும் முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆலியா பட்டை ரன்பீர் கபூர் அப்படியே தூக்கிச் சென்றார். இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்கதிருமண புகைப்படங்களை வெளியிட்டார் ஆலியா பட்

ADVERTISEMENT

முன்னதாக, திருணம் குறித்து மற்றும் திருண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஆலியா பட்.

ஆலியா பதிவு:    

 "வீட்டில் இன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் செலவழித்த எங்களுக்குப் பிடித்த இடமான பால்கனியில் திருமணம் செய்துகொண்டோம். ஏற்கெனவே ஏராளமான நினைவுகள் உள்ள நிலையில், இருவரும் இணைந்து மேற்கொண்டு நினைவுகளைக் கட்டமைக்கவுள்ளோம். அன்பு, சிரிப்பு, அமைதி, சினிமா இரவுகள், குட்டிச் சண்டைகள் உள்ளிட்டவை நினைவுகளில் நிறைந்துள்ளன.

இந்த முக்கியமானத் தருணத்தில் உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி. இந்தத் தருணத்தை அது மேலும் சிறப்பாக்கியது.

அன்புடன் ரன்பீர் மற்றும் ஆலியா."


 

Tags : Ranbir kapoor
ADVERTISEMENT
ADVERTISEMENT